போட்டிக்கு ஹோட்டல் தொடங்கிய கோபி.. பாக்யாவுக்கு வந்த பெரிய அடி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி தனது நிறுவனம் நஷ்டத்தில் போனதால் ஆபிஸை இழுத்து மூடிவிட்டு வீட்டில் சும்மா தான் இருக்கிறார். அதன் பின் அவருக்கு உதவ வேண்டும் என பாக்யா தான் மாமியார் ஈஸ்வரியிடம் நகைகளை கொடுக்கிறார்.
பாக்யா ஏற்கனவே திட்டமிட்டது போல ஒரு ஹோட்டலை திறக்கிறார். திறப்பு விழாவுக்கு மினிஸ்டர் வர இருந்த நிலையில் அதை தடுக்க கோபி சதி வேலைகள் செய்கிறார். ஆனால் அது தோல்வியில் முடிகிறது.
போட்டிக்கு ஹோட்டல் தொடங்கும் கோபி
அதன் பின் கோபி தானும் ஒரு ஹோட்டல் தொடங்குவதாக கூறுகிறார். அதை கேட்டு எழில் 'எங்க அம்மாவுக்கு போட்டியா வரீங்களா' என நேரடியாகவே கேட்கிறார்.
கோபியும் போட்டிக்கு ஹோட்டல் திறக்க அதில் நல்ல வியாபாரம் ஆகிறது, ஆனால் பாக்யாவின் ஹோட்டல் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது. இது தற்போது வெளியாகி இருக்கும் promoவில் காட்டப்பட்டு இருக்கிறது. இதோ..