ராதிகா - கோபி திருமணத்தை நிறுத்த அப்பா செய்த விஷயம்! ஆனா இப்படி ஆகிடுச்சே
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. அதற்கு காரணம் கோபி ராதிகாவை திருமணம் செய்ய முனைப்பு காட்டி வருவது தான்.
கோபி - ராதிகா திருமணம்
திருமண விஷயம் பற்றி கோபி அவரது அம்மாவிடம் ஏற்கனவே கூறிவிட்ட நிலையில் அவர் வீட்டுக்கு வந்து கணவரிடம் அந்த விஷயத்தை கூறுகிறார். இதற்கெல்லாம் காரணம் பாக்யாவின் பிடிவாதம் தான் எனவும் குற்றம்சாட்டுகிறார்.
எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த போவதாக கோபியின் அப்பா உறுதியாக அப்போது கூறுகிறார். ஒருபக்கம் பாக்யா தான் கோபி திருமணத்திற்கு தான் சமைக்க போகிறோம் என்பது தெரியாமல் மிக தீவிரமாக சமையலுக்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
அப்பாவின் திட்டம் வீண்
தற்போது கோபியின் அப்பா திருமணத்தை நிறுத்த முயற்சி மேற்கொள்கிறார். கோபியை நேரில் சந்தித்து 'இது தவறு' என பேசுகிறார்.
அப்போது கோபி கோபமாக பேசுகிறார். "என்னோட முடிவில் இருந்து ஒரு அடி கூட பின்வாங்கபோவதில்லை . எனக்கும் பாக்யாவுக்கும் முடிந்தது முடிந்தது தான். எனக்கும் ராதிகாவுக்கு கல்யாணம் நடக்கத்தான் போகுது" என உறுதியாக பேசுகிறார்.
இந்த காட்சிகள் நாளை தான் ஒளிபரப்பாக இருக்கின்றது. ப்ரோமோ இதோ
Also Read: அதற்குள் விளம்பரத்தில் நடிக்க வந்துவிட்ட ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்! அதுவும் யாருடன் பாருங்க