பாக்யாவுக்கும் உண்மை தெரிஞ்சிபோச்சு! பாக்கியலட்சுமி தொடரின் அடுத்த பரபரப்பு ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியல் பார்த்து வரும் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த ட்விஸ்ட் தற்போது வந்துவிட்டது. தொடர்ந்து குடும்பத்தை ஏமாற்றி ராதிகா உடன் கள்ள காதலில் இருந்த கோபி தற்போது ராதிகாவிடம் சிக்கிக்கொண்டார். அவர் குடித்துவிட்டு போதையில் தான் பாக்யா உடன் இருக்கும் போட்டோவை காட்டி இவர் தான் என் மனைவி என கூறிவிடுகிறார். அதை கேட்டு ராதிகாவுக்கு கடும் அதிர்ச்சியாக இருக்கிறது.
அதன் பின் கோபி தற்போது சொந்த வீட்டிலும் மாட்டிக்கொள்கிறார். அவர் குடிபோதையில் வீட்டுக்கு வர எழில் மற்றும் பாக்யா அவரை கொண்டு சென்று ரூமில் படுக்க வைக்கின்றனர்.
அப்போது கோபி ராதிகாவிடம் பேசுவதாக நினைத்து போதையில் பேசிக்கொண்டிருக்கிறார். அதை பாக்யா கேட்டுவிடுகிறார். அப்போது தான் கோபி இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்கிற விஷயமே அவருக்கு தெரிய வருகிறது.
வரும் எபிசோடுகளில் இந்த காட்சி வர இருக்கிறது. ப்ரோமோ வீடியோ இதோ