பச்சோந்தி இனியா.. வறுத்தெடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள்
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பாக்யா பணத்தை ரெடி செய்து கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு அனுப்பிய காட்சிகள் தான்.
இதை தொடர்ந்து தற்போது இனியா +2 ரிசல்ட் வரும் நாளில் பாக்யா தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒரு கேட்டரிங் காண்ட்ராக்ட் செய்ய சென்றுவிடுகிறார். அங்கு போன் டவர் கிடைக்காததால் இனியா மார்க் பற்றியே யோசித்து கொண்டு இருக்க, சமையலில் கோட்டை விட்டுவிடுகிறார்.
அதனால் சமையல் சொதப்பி நிச்சயதார்த்தமே நின்று போகும் நிலை வருகிறது. இதனால் பாக்யா மற்றும் மற்ற பெண்களை பிடித்து அடைத்து வைத்துவிடுகின்றனர். அதனால் பாக்யாவால் இனியா ஸ்கூல் 1st எடுத்த பாராட்டு விழாவுக்கு வர முடியாமல் போகிறது.
ப்ரோமோ
இந்நிலையில் தற்போது புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யா லேட்டாக வருவதால் இனியா கோபமாக அவரிடம் சண்டை போடுகிறார். பாக்யா பேசுவதை ஒரு வார்த்தை கூட இனியா கேட்பதில்லை.
இந்த ப்ரோமோவை பார்த்து தற்போது இனியாவை நெட்டிசன்கள் 'பச்சோந்தி' என தாக்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.
கார் வாங்கி 6 மாதத்தில் குக் வித் கோமாளி சக்தி விபத்தில் சிக்கி காயம்! அதிர்ச்சி வீடியோ