ராதிகாவிடம் கோபி பற்றிய உண்மையை போட்டுடைத்த நபர்! பாக்கியலட்சுமி சீரியலில் வெடிக்கும் பிரச்சனை
பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய தொடர்கள் கடந்த இரண்டு வாரங்களாக மகா சங்கமம் என்கிற பெயரில் சேர்த்து ஒளிபரப்பி வருகின்றனர். கோபியின் அப்பா பிறந்தநாளை கொண்டாட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வருவது போல காட்சிகள் நகர்ந்தது.
அந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு ராதிகா வந்ததால் நிச்சயம் கோபி வசமாகி சிக்கிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அறைக்கு சென்று ஒளிந்துகொண்டு தப்பித்துவிடுகிறார். அதற்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் ராதிகாவிடம் சென்று அவர் திருமணம் செய்ய உள்ள நபர் போட்டோவை காட்டும்படி கேட்க, அது கோபி என அறிந்து ஷாக் ஆகின்றனர்.
அதை பற்றி மூர்த்தி கோபியிடம் பேச இருவருக்கும் நடுவில் சண்டை வெடிக்கிறது. இந்நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் சென்று "கோபி நல்லவர் இல்லை, உங்களையும் அவரது குடும்பத்தையும் சேர்த்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்" என கூறுகின்றனர்.
அதை கேட்டு ராதிகா கடும் அதிர்ச்சி ஆகின்றார். ப்ரொமோ இதோ..