பாக்யா பேச்சால் அதிர்ந்த ராதிகா! இப்படியே போனா என்ன தான் கிளைமாக்ஸ்
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது இந்த தொடருக்கு தான் அதிகம் டிஆர்பி அதிகம் கிடைத்து வருகிறது. இத்தனை நாள் குடும்பத்தை ஏமாற்றிக்கொண்டிருந்த கோபி தற்போது வசமாக சிக்கிக்கொண்டார். அவரே போதையில் ராதிகாவிடம் தன் குடும்ப போட்டோவை காட்டிவிடுகிறார்.
அதே நேரத்தில் தனக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதையும் பாக்யாவிடம் உளறிவிடுகிறார். இப்படி கோபி தனது உண்மை முகத்தை அவருக்கே தெரியாமல் வெளிகாட்டிவிட்டதால் சீரியல் சூடு பிடித்து இருக்கிறது.
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் ப்ரோமோவில் பாக்யா ராதிகாவை சந்தித்து பேசுகிறார். அப்போது ராதிகா தான் திருமணம் செய்ய இருந்த நபர் ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார்.
"அவரே உண்மையை சொன்னார் என்றால் அவர் நல்லவராக தான் இருக்க முடியும்" என பாக்யா கூறுகிறார். அது உன் கணவர் தான் என வெளிப்படையாக சொல்ல முடியாமல் ராதிகா அந்த நேரத்தில் குழப்பத்தில் நிற்கிறார்.
ப்ரொமோ வீடியோ இதோ..