பாக்யலட்சுமிக்கு திருமணமா.. அதுவும் யாருடன் தெரியுமா? அதிரடியான இறுதி வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. கடந்த 6 வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி முடிவு வந்துள்ள நிலையில், அதனுடைய இறுதி ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதில், கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்ற கோபி, கொலைகாரன் அல்ல அவர் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டு வழக்கில் இருந்து வெளியேறியுள்ளார். பின் இனியாவிற்கு அவரது காதலன் ஆகாஷுடன் திருமணம் நடக்கிறது.
பாக்யலட்ஷமிக்கு திருமணமா
பிள்ளைகள் அனைவரும் அவரவர் பாதைகளை தேர்தெடுத்து சென்றுவிட்டனர். பாக்கியா நீ ஏன் கோபியுடன் மீண்டும் சேர்ந்து வாழ கூடாது என அவரது மாமியார் ஈஸ்வரி கேட்கிறார். இதற்கு பாக்கியா என்ன பதில் கூறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
ஏற்கனவே இருவரும் விவாகரத்து ஆகியுள்ள நிலையில், பழைய விஷயங்களை அனைத்தையும் மறந்துவிட்டு கோபியை திருமணம் செய்துகொள்வாரா? அல்லது முடியாது என மறுக்க போகிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம். ப்ரோமோ வீடியோ..

அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முற்றிலும் தயார்... புடினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
