பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பாக்கியலட்சுமி சீரியல்
சின்னத்திரையில் தற்போது டாப் 5 சீரியல்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அது கண்டிப்பாக பாக்கியலட்சுமி சீரியலும் இடம்பெறும். நெட்டிசன்கள் சிலர் இந்த சீரியலை ட்ரோல் செய்தாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் பாக்கியலட்சுமி சீரியல் இடம்பிடித்துவிட்டது.
குறிப்பாக கோபி கதாபாத்திரதிற்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இடையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சதீஸ் வெளியேறுவதாகவும் தகவல் வெளிவந்தது. ஆனால், அவர் வெளியேறினால் கண்டிப்பாக அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என அவரை பாக்கியலட்சுமி சீரியலில் தக்கவைத்தனர்.
கோபி கதாபாத்திரம் போலவே இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து நடிகர், நடிகைகளின் சம்பளம் விவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர், நடிகைகளின் சம்பளம்
அதன்படி, இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஸ் ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதே போல் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுசித்ரா ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.
மேலும், எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால், ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யாவிற்கும் ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது என கூறுகின்றனர். செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விகாஷ் ரூ. 10 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
ராதிகாவாக நடிக்கும் நடிகை ரேஷ்மா ரூ. 10 ஆயிரமும், இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை நேஹா ரூ. 8 ஆயிரமும் ஒரு நாளைக்கு சம்பளமாக வாங்கி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.