பாக்கியலட்சுமி சீரியல் நடிகருடன் காதலா, திருமணமா?- போட்டுடைத்த நடிகை திவ்யா கணேஷ்
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியா, கணவரால் ஏமாற்றப்பட்டு விவாகரத்து பெற்றவர் பழைய வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருக்காமல் எதிர்க்காலத்தை நோக்கி பயணிக்கிறார்.
அவருக்கு பிரச்சனை கொடுக்கும் வகையில் அவரது முன்னாள் கணவர் செயல்பட்டு வருகிறார், அப்படி தான் இப்போது ஒரு பிரச்சனையை உருவாக்கியுள்ளார்.
அதில் இருந்து பாக்கியா எப்படி வெளியே வரப்போகிறார் என்பதை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
திவ்யா கணேஷ்
இந்த தொடரில் கணவன் மனைவியாக திவ்யா கணேஷ் மற்றும் விகாஸ் சம்பத் இருவரும் நடிக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் காதலித்து வர நிஜத்தில் இணைய இருக்கிறார்கள் என செய்திகள் வந்தன, விரைவில் திருமண அறிவிப்பு வெளிவரப்போவதாக செய்திகள் வலம் வந்தது.
ஆனால் இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு பெரிய பதிவையும் போட்டுள்ளார்.