ரஞ்சிதமே பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள்- பாக்கியாவா இது?
பாக்கியலட்சுமி சீரியல்
பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்பதின் ரீமேக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். ஒரு பெண்ணை சுற்றியே வலம் வரும் இந்த கதை தாய்மார்களின் பேவரெட் சீரியலாக அமைந்துவிட்டது.
குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெண்மணி வாழ்க்கையில் தனியாக இருந்து எப்படி தனது குடும்பத்தை பார்த்துக் கொள்கிறாள் என்பதை கதை காட்டுகிறது.
அடுத்தடுத்து அதிரடி திருப்பங்களாக தொடரில் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.
ஆட்டம் போட்ட பாக்கியா
இந்த தொடரில் பாக்கியா என்ற வேடத்தில் நடிக்கும் சுசித்ராவும், ரித்திகாவும் விஜய்யின் வாரிசு பட ரஞ்சிதமே பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட இது பாக்கியாவா செம ஆட்டம் போடுகிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதோடு வீடியோவிற்கும் ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தாவை அவரது வீட்டில் சந்தித்துள்ள பிரபலங்கள்- யார் பாருங்க