பிக் பாஸ் 9க்கு வரும் மக்கள் மனம் கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..
பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9 குறித்த பேச்சு துவங்கிவிட்டது. 8வது சீசனை தொடர்ந்து விஜய் சேதுபதிதான் பிக் பாஸ் 9-ஐ தொகுத்து வழங்கப்போகிறார் என அறிவித்துவிட்டனர்.
பிக் பாஸ் 9ல் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்து தகவல் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. சீரியல் நடிகை ஷபானா, குக் வித் கோமாளி உமைர், நடிகை ஃபரினா உள்ளிட்டோர் இந்த சீசனில் போட்டியாளராக வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.
பாக்கியலட்சுமி நடிகை
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்த நடிகை நேஹா பிக் பாஸ் 9ல் போட்டியாளராக வரப்போகிறாராம். கடந்த சீசனில் இவருடைய நண்பர் விஷால் போட்டியாளராக கலந்துகொண்டார். அவரை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அதே போல் கடந்த பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட நடன இயக்குநரும், நடிகருமான சாண்டியின் மனைவியின் தங்கை சிந்தியா வினோலின் பிக் பாஸ் 9ல் போட்டியாளராக கலந்துகொள்ள போகிறாராம்.