எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. வெளிவந்த வீடியோ..
எதிர்நீச்சல் 2
சின்னத்திரையில் மக்களின் மனதில் இடம்பிடித்த சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், எதிர்நீச்சல் 2 எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
அதன்படி, திருச்செல்வம் இயக்கத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற தலைப்பில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில், எதிர்நீச்சல் முதல் சீசனில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மதுமிதாவுக்கு பதிலாக தொகுப்பாளினி பார்வதி நடித்து வருகிறார். 32 எபிசோட்களை கடந்துள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
புதிய எண்ட்ரி
இந்த நிலையில், விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது புதிய கதாபாத்திரத்தில் பேபி ஷெரின் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியலில் மயூரா எனும் கதாபாத்திரத்தில் ராதிகாவின் மகளாக நடித்து வருபவர் பேபி ஷெரின். பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.