பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் நிஜ வாழ்க்கையில் இப்படிப்பட்டவரா..! ரசிகர்களுக்கு ஷாக்
சின்னத்திரையில் இன்று பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை திவ்யா கணேஷ்.
இவர் தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த கதாபாத்திரத்தின் மூலம் தற்போது தனக்கென்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார் திவ்யா.
இந்நிலையில் சீரியலில் நடிகையாக இருக்கும் திவ்யா கணேஷ் நிஜ வாழ்க்கையில் வக்கீல் பட்டம் பெற்றவராம்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா மதுரையில் கல்லூரியை முடித்த பிறகு வக்கீலாக முடிவெடுத்துள்ளார்.
ஆனால், அவருக்கு திடீரென சின்னத்திரை வாய்ப்பு கிடைக்கவே கேளடி கண்மனி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
நடிகையான திவ்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.