முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா... கியூட் க்ளிக்ஸ்
பாக்கியலட்சுமி
தமிழ் சின்னத்திரையில் ஒரு காலத்தில் வெற்றிகரமாக ஓடிய தொடர் பாக்கியலட்சுமி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆரம்பத்தில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்த தொடர் இப்போது கதையில் கொஞ்சம் சொதப்ப டாப் 5ல் கூட வருவது இல்லை.

இப்போது தொடர் குறித்தும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது, அதாவது பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக கூறப்படுகிறது.
 
    
    மீனா விஷயத்தில் அண்ணாமலை சொன்ன விஷயம், வெளியே செல்ல முடிவு எடுத்த விஜயா... பரபரப்பான சிறகடிக்க ஆசை புரொமோ
நடிகையின் போட்டோ
இந்த பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் நடிகை ரித்திகா.
இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே திருமணம் செய்துகொண்டு சீரியலில் இருந்து வெளியேறி செட்டில் ஆனார்.

சமீபத்தில் நடிகை ரித்திகாவிற்கு மகள் பிறந்திருந்தார், தற்போது மகள், கணவருடன் இணைந்து ரித்திகா அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    