நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட்
பாக்கியலட்சுமி
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரபரப்புக்கு இடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி.
சுசித்ரா என்ற நடிகையை முக்கிய நாயகியாக வைத்து ஒளிபரப்பான இந்த தொடர் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக அமைந்தது. 5 வருடங்கள் வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் டிஆர்பியில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
இந்த வாரத்துடன் சீரியல் முடிவுக்கு வரும் நிலையில் பரபரப்பின் உச்சமாக கதை நகர்கிறது.
இன்றைய எபிசோட்
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில், சிசிடிவி கேமராவை காட்சிகளை போலீஸிடம் பாக்கியா காட்டுகின்றனர்.
சுதாகர் நிதிஷ் இருவருக்கும் பண பிரச்சனையால் சண்டை வர ஒரு கட்டத்தில் அடிதடியாகிறது. கோபத்தில் சுதாகர் நிதிஷை தாக்க அந்த நேரத்தில் வந்த இனியா கொலை பழியில் சிக்கிக் கொள்கிறார்.
இந்த விவரம் போலீசாருக்கு தெரியவர கோபி விடுதலை ஆக வீட்டிற்கு வருகிறார்.