ராதிகா-கோபி இருவரையும் ஒன்றாக பார்த்த பாக்யா.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் தாப்ரோது கோபியின் உண்மை முகம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. கோபி அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்க ராதிகா மற்றும் பாக்யா இருவருமே ஹாஸ்பிடல் வருகிறார்கள்.
கோபியின் மனைவி என ராதிகா ஹாஸ்பிடலில் கூறியது பாக்யாவுக்கு தெரிந்துவிட்டது. அதன் பின் பாக்யா உள்ளே கோபி இருக்கும் அறைக்கு சென்று பார்க்கும்போது அங்கு ராதிகா கையை பிடித்துக்கொண்டு கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.
அதை பார்த்து கடும் அதிர்ச்சி ஆகும் பாக்யா வெளியில் வந்து உறைந்துபோய் நிற்கிறார். அதன் பின் மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார்.
அவரை அருகில் இருபவர்கள் தூக்கி உட்காரவைத்து தண்ணீர் கொடுத்து சரிசெய்கின்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து பாக்யா மீண்டு வருவாரா என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியும்.