முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. பரபரப்பான கதைக்களத்தில் வெளிவந்த ப்ரோமோ
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. 5 ஆண்டுகளாக தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஆம், பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்துள்ளதாக ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளனர். இதில் மாபெரும் வெற்றி தொடரின் இறுதி கட்டம் என குறிப்பிட்டுள்ளனர்.
வெளிவந்த ப்ரோமோ
இந்த ப்ரோமோ வீடியோவில் தனது கணவரை சந்திக்க இனியா செல்கிறார். இதன்பின் இருவருக்கும் இடையே கைகலப்பு நடக்க, தனது கணவர் பிடித்து தள்ளிவிடுகிறார் இனியா.
இதில் தவிர விழும் நிதிஷிற்கு தலையில் அடிபடுகிறது. என்ன ஆனது என்று பார்க்க நிதிஷ் அருகே இனியா செல்ல, அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..