அட பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கோபி என்ன இப்படியொரு கெட்டப் மாறிவிட்டார்- லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்
பாக்கியலட்சுமி சீரியல்
விறுவிறுப்பின் உச்சமாக கதைக்களத்தில் நிறைய மாற்றத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்ட பின் தனது குடும்பத்தை பாக்கியா பல தடைகளை தாண்டி பார்த்து வருகிறார்.
இப்போது அடுத்தடுத்து பெரிய இடியாய் நிறைய சம்பவங்கள் நடந்து வருகிறது.
கணேஷ் உயிருடன் வந்து அமிர்தா மற்றும் நிலாவை என்னுடன் அனுப்பிவிடுங்கள் என அவர் ஒருபக்கம், செழியன் மாலினியிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் பிரச்சனை இன்னொரு பக்கம்.
இதில் ராதிகாவால் கேன்டீன் போய் இப்போது வேலைக்காக பாக்கியா ஒரு பிரச்சனையில் இருக்கிறார்.
இப்படி எல்லா பக்கமும் விறுவிறுப்பின் உச்சமாக கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. இந்த கதைக்களம் எப்படி மாறும், பாக்கியா எப்படி சமாளிக்க போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.
கோபி கெட்டப்
இந்த நிலையில் கதையில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் பாக்கியா வீட்டில் புதிய கெட்டப்பில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரது தந்தை ராமமூர்த்தி போல் கெட்டப் போட்டு நானும் தாத்தா தானே என பதிவு செய்துள்ளார்.
அவரது புகைப்படத்திற்கு ரசிகர்களும் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.