நாயகியாக புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடர் புகழ் நடிகை... யார் பாருங்க
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் பாக்கியலட்சுமி.
குடும்பத்தையே நம்பி வாழ்ந்து வந்த ஒரு பெண் கணவன் ஏமாற்றியதால் தனது வாழ்க்கை போனது என துவண்டு போகாமல் அவர் இல்லை என்றாலும் என்னால் சாதிக்க முடியும் என வாழ்க்கையில் முன்னேறிய பாக்கியலட்சுமி என்ற பெண்ணின் கதையாக தொடர் இருந்தது.

இந்த தொடரில் பாக்கியலட்சுமியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை நேஹா. விஜய் டிவியை தொடர்ந்து சன் டிவி சீரியல்களிலும் நேஹா கமிட்டாகி நடித்து வந்தார்.
புதிய தொடர்
தற்போது நடிகை நேஹா நாயகியாக நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.

அதாவது அவர் சன் டிவியில் முன்னணி நாயகியாக பூங்கொடி என்ற சீரியலில் நடிக்க உள்ளாராம். 18 Reels Production தயாரிக்கும் இந்த தொடரில் நாயகனாக ஷ்யாம் நடிக்க உள்ளாராம்.