பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரேஷ்மாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது, அதாவது கதைக்களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்கிறது.
இப்போது கோபி ஒரு மாதம் அவகாசம் கொடுத்துள்ளார், அதற்குள் 70 லட்சத்தை எழில் எப்படி சம்பாதிக்க போகிறார், வீட்டை எப்படி கைப்பற்ற போகிறார் என்பது அடுத்த கதைக்களமாக உள்ளது.
அண்மையில் வந்த புரொமோவில் கதை விற்பதில் எழிலுக்கு பிரச்சனை வருவது போல் காட்டப்படுகிறது.
ரேஷ்மாவின் வீடு
இந்த தொடரில் ராதிகா என்ற வேடத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அவரும் இன்ஸ்டாவில் ஏதாவது பதிவு போட்ட வண்ணம் உள்ளார்.
தற்போது அவர் தனது வீட்டை சுற்றிகாட்டி எடுத்த வீடியோவை சொந்த யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.