இனியா கன்னத்தில் பளார் என அறைந்த பாக்யா: பாக்கியலட்சுமி சீரியலில் வெடிக்கும் புது பிரச்சனை
பாக்யலக்ஷ்மி சீரியலில் இன்று எழில் தனது படத்திற்காக பாடல் பாட அமிர்தாவை ஸ்டூடியோவுக்கு வர வைக்கிறார். அதற்காக தாத்தா பாட்டியையும் அவர் உடன் அழைத்து செல்கிறார். ரெக்கார்டிங் தொடங்கியதும் அமிர்தா பதற்றத்தில் சரியாக பாடுவதில்லை. அதன் பின் ரிக்கார்டிங் வேறொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என எழில் அவர்களை பீச்சுக்கு அழைத்து செல்கிறார்.
மறுபுறம் வீட்டில் இனியா டாக்டர் எப்போது வருவார் என கதவை பார்த்துக்கொண்டிருக்கிறார். தாத்தாவை ஏன் இன்னும் எழில் அழைத்து வரவில்லை என ஜெனியிடம் கேட்கிறார். அந்த நேரத்தில் எழில் தாத்தா, பாட்டி இருவருடன் வீட்டுக்கு வந்து சேர்கிறார்.
டாக்டரும் வந்து சேர இனியா காதல் மயக்கத்தில் ஓடிச்சென்று அவருடன் பேசுகிறார். அவரை தாத்தா அறைக்கு கூட்டி செல்கிறார். அவர் பிசியோதெரபி ட்ரீட்மெண்ட் கொடுத்துக்கொண்டிருக்கும் போது செல்போன் எடுத்து அவரை போட்டோ எடுக்கிறார்.
இதை ஜெனி கவனித்துவிடுகிறார். டாக்டர் சென்றபிறகு இனியாவை அழைத்து எச்சரிக்கிறார். "எதற்காக அவரிடம் அப்படி வழிந்துகொண்டு பேசுகிறாய். நாளையில் இருந்து டாக்டர் வரும்போது நீ கீழே வராதே" என கூறுகிறார். காதல் மயக்கத்தில் இருக்கும் இனியா கடும் கோபத்தில் ஜெனியை திட்டுகிறார்.
"அதை சொல்ல நீங்க யாரு" என இனியா கேட்க, அந்த நேரத்தில் பாக்யாவும் வந்துவிடுகிறார். இனியா சொல்வதை கேட்டுவிட்டு 'அண்ணியிடம் இப்படியா மரியாதை இல்லாமல் நடந்துகொள்வாய்' என சொல்லி கேட்கிறார். மீண்டும் இனியா தவறாக பேச கன்னத்தில் பளார் என ஒரு அரை விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.
போகிற போக்கை பார்த்தால் இனியா புது வில்லியாக மாறி விடுவாரோ?