இப்படி பண்ணா.. பாக்கியலட்சுமி எப்படி 1000 எபிசோடு ஓட்ட முடியும்: கோபி 'சதீஷ்'
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில வாரங்களாக சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. கோபியின் சுயரூபம் தெரிந்து மொத்த வீடும் கலங்கி நிற்கிறது.
விவாகரத்து
பாக்யா முதலில் வீட்டில் இருந்து வெளியேறினாலும், அதற்கு பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி மேலும் ஒரு பெரிய முடிவை எடுக்கிறார். விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டுக்கு செல்ல முடிவெடுக்கிறார்.
அதன்படி அவர்கள் கோர்ட்டுக்கு செல்ல நீதிபதியும் விவாகரத்தை கொடுத்துவிடுகிறார்.
நடிகர் சதீஷ் கருத்து
இந்நிலையில் கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் 'கோபி கெட்டவன் இல்லை' என பேசி இருக்கிறார்.
பாக்யாவுக்கு கோபிக்கும் டைவர்ஸ் ஆகிவிட்டது. நல்ல விஷயம் தானே. இரண்டு பேருக்கு பிடிக்கவில்லை, சேர்ந்து வாழ்வதற்கு மனசில்லை, ஒருத்தருக்கு கூட விருப்பம் இல்லை என்றால்.. பாக்யா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கோபி கெட்டவன் இல்லை, துரோகம் செய்திருக்கான். அதை நேராக சொல்லி இருக்கலாம். அப்படி செய்தால் கதை 1000 எபிசோடு போகாது.
என்னோட ஓட்டு பாக்கியலட்சுமிக்கு தான். பெண்கள் பாவம். ஆணாதிக்கத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.
இவ்வாறு நடிகர் சதீஷ் தெரிவித்து இருக்கிறார்.
#Baakiyalakshmi #Gopi 07.08.2022 pic.twitter.com/OQZu883Esf
— Parthiban A (@ParthibanAPN) August 7, 2022
கடற்கரையில் அப்படி ஒரு போஸ்.. இணையத்தை தெறிக்கவிட்ட சீரியல் நடிகை சாந்தினி