விஜய் டிவியை மறைமுகமாக தாக்கிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி
கோபி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வருபவர் சதீஷ். இந்த வருடம் நடந்த விஜய் டிவி விருது விழாவில் பாக்யாவாக நடிக்கும் சுசித்ராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. மேலும் பாக்கியலட்சுமி தான் சிறந்த ப்ரைம் டைம் சீரியல் என்ற விருதையும் வென்றது.
இந்த விருது விழாவில் கோபியாக நடிக்கும் சதிஷ் கலந்துகொள்ளவே இல்லை. அவருக்கு எந்த விருதும் கொடுக்கப்படவில்லை.
தான் சீரியலில் இருந்து விலகுவதாக விருது விழா முடிந்த மறுநாளே அறிவித்தார் சதீஷ். இருப்பினும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் தொடர்ந்து நடித்து வருகிறார்.
விஜய் டிவியை தாக்கிய கோபி
தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் மகன் எழில் உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் கோபி, "நல்லா நடி மேன்.. அடுத்த அவார்ட்ஸ் ஃபங்க்ஷன்லயாவது எதாவது கிடைக்கும். வேண்டாம்.. உங்க அன்பு போதும்" என பதிவிட்டு இருக்கிறார்.
கோபி விஜய் டிவியை தாக்கி பேசி இருப்பதை பார்த்து ரசிகர்களும் கமெண்டில் விமர்சித்து வருகின்றனர்.
முதல் திருமண நாளில் கண்ணீர் விட்ட நயன்தாரா! விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ்