கோபியை அசிங்கப்படுத்திய பழனிச்சாமி! இப்படி சொல்லிட்டாரே.. Baakiyalakshmiல் இன்று
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தொடர்ந்து கோபிக்கு பல சிக்கல்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. பாக்யா இருக்கும் வீட்டிலேயே தான் தற்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் இருக்கிறார்கள்.
ராதிகாவை கோபியின் அம்மா தொடர்ந்து அசிங்கப்படுத்தி வருகிறார். அதே போல கோபி இனியாவுக்காக பள்ளிக்கு சென்று ராதிகாவிடம் வசமாக மாட்டிக்கொண்டார். அதனால் ராதிகா அவரை திட்டி தீர்த்துவிட்டார்.
அசிங்கபடுத்திய பழனிச்சாமி
இன்றைய எபிசோடில் பாக்யாவின் நண்பர் பழனிச்சாமி வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி வீட்டுக்குள் வர, அவரை பழனிச்சாமி தடுத்து நிறுத்துகிறார்.
"சேல்ஸ்மேன் என்றால் வாசலிலேயே நிற்க வேண்டும். இப்படி நேராக உள்ளே போவீங்களா. சோப்பு, சீப்பு விக்குறீங்களா" என கேட்டு அசிங்கப்படுத்துகிறார். கோபியும் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றுவிடுகிறார்.
அதன் பின் தான் கோபி யார் என்கிற உண்மையை பழனிச்சாமியிடம் மற்றவர்கள் கூறுகின்றனர். அவர் மன்னிப்பு கேட்டுவிடவா என கேட்க, வேண்டாம் என அவரை தடுத்துவிடுகின்றனர். கோபி தனது அறைக்கு சென்று கோபத்தில் கொந்தளிக்கிறார்.
ஆரம்பமே இப்படி என்றால் இனி கோபி மற்றும் பழனிச்சாமி இடையே அதிகம் மோதல்கள் நடப்பது போல தான் கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்ன வயசு விஜய்யாக நடித்தவரா இது.. பீச்சில் ஐஸ்கிரீம் விற்று இவ்வளவு சம்பாதிக்கிறாரா?