பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்த பிரச்சனை, உடனே நிறுத்தப்படுமா?- ரசிகர்கள் ஷாக்
விஜய் தொலைக்காட்சியில் பெங்காலி மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்.
கணவர், குழந்தைகளே வாழ்க்கை என வாழும் ஒரு குடும்ப தலைவியின் போராட்டத்தை பற்றி தொடர் பேசுகிறது. தொடரில் இப்போது ஒரு முக்கியமான விஷயம் காட்டப்பட்டு வருகிறது.
அது என்னவென்றால் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் அதிகம் சின்ன குழந்தைகள் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாகிறார்கள். அதை மையப்படுத்தி கதையில் சில காட்சியமைப்பை வைத்துள்ளார்கள்..
பள்ளி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்துதலுக்கு தற்கொலை செய்தது போல் காட்டுகிறார்கள். ஏற்கெனவே அப்படிபட்ட விஷயங்கள் நடக்கும் நிலையில் கதையில் இப்படி காட்டியிருப்பது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாசீட்டீவாக கொண்டு செல்லலாமே என்று கமெண்ட் செய்கின்றனர். இந்த நிலையில் சமூக ஆர்வலம் முகம்மது கோஷ் என்பவர் போலீசில் சீரியல் குறித்து புகார் எழுப்பியுள்ளார்.
இதனால் இந்த பள்ளி பாலியல் தொல்லை காட்சியை உடனே நிறுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.