மகள் இனியா இப்படி சொல்லிட்டாரே.. இந்த அவமானம் தேவையா கோபி! பாக்கியலட்சுமி சீரியலில் இன்று
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த ஒருவாரமாக பரபரப்பான பல சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கோபி ராதிகா உடன் ஹாஸ்பிடலில் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுவிட்டு பாக்யா அதை பற்றி வீட்டுக்கு வந்ததும் கேட்க, வீட்டில் எல்லோருக்கும் உண்மை தெரிந்துவிடுகிறது.
அதன் பின் பாக்யா வீட்டில் இருந்து வெளியேறிவிடுகிறார். அவரை அழைத்து வர மகன் எழில் உடன் செல்கிறார். ஆனால் பாக்யா அவர் மசாலா நிறுவனத்திலேயே இருக்கிறார்.
இந்நிலையில் கோபியுடன் மகள் இனியா பேசுகிறார். ஏன் இப்படி பண்ணீங்க, இதை நான் எதிர்பார்க்கவே இல்லை, என்னை கூட உங்களுக்கு பிடிக்கவில்லையா' என கேட்கிறார்.
'அப்படி எல்லாம் இல்லை. நான் இந்த வீட்டை விட்டு வெளியில் சென்றிருந்தாலும் நான் உன்னை கூட்டிக்கொண்டு தான் சென்றிருப்பேன்' என கோபி கூறுகிறார்.
'நீங்க கூப்பிட்டு இருந்தாலும் நான் வந்திருக்க மாட்டேன்' என கோபமாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார். என்ன சொல்வது என தெரியாமல் அமைதியாக நிற்கிறார் கோபி.
இதற்கு முன்பே ஒருமுறை இனியாவிடம் கோபி இதுபற்றி மறைமுகமாக பேசி இருக்கிறார். ‘இதுக்கு தான் அப்போ அப்படி கேட்டீங்களா?’ எனவும் கேட்டு ஷாக் கொடுக்கிறார் இனியா.