அடுத்த கோபி ரெடி.. பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் தாங்குவாங்களா?
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் தான் தற்போது அந்த சேனலின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது. நல்ல டிஆர்பி ரேட்டிங் கிடைத்து வர அந்த சீரியலில் அடிக்கடி வரும் பரபரப்பான காட்சிகளும் காரணம்.
பாக்யாவின் கணவராக இருந்த கோபி வீட்டுக்கு தெரியாமல் ராதிகா உடன் கள்ளகாதலில் இருப்பது போல தான் கதை நீண்ட காலமாக நகர்ந்து. அதன் பின் பாக்யா - கோபி டைவர்ஸ் பெற்று, தற்போது ராதிகாவை திருமணம் செய்துகொண்டு வீட்டில் தினம்தோறும் சண்டை என்பதால் சமாளிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறார் கோபி.
அடுத்த கோபி ரெடி
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் கதையில் மீண்டும் கள்ளக்காதலை நுழைந்திருக்கிறார் இயக்குனர். கோபியின் மூத்த மகன் தான் அது. அவரை பிடித்து இருக்கிறது என ப்ராஜெக்ட் கொடுத்த நிறுவனத்தின் ஓனர் மாலினி ஓப்பனாக கூறுகிறார்.
மேலும் செழியனை தினமும் வரவைத்து குடிக்கவைக்கிறார். அதனால் அவர் சீரியலில் அடுத்த கோபியாக மாறலாம் என தெரிகிறது.
இதை பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் தாங்குவார்களா?
அவருக்கு பதில் இவர்.. தவமாய் தவமிருந்து தொடரில் வந்திருக்கும் புது பாண்டி