நீண்ட வருடங்கள் ஓடிய பாக்கியலட்சுமி சீரியல் கடைசிநாள் படப்பிடிப்பு போட்டோ... செம வைரல்
பாக்கியலட்சுமி
கொரோனா பரபரப்பிற்கு இடையில் விஜய் டிவி புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் பாக்கியலட்சுமி.
சிலர் நாம் பார்த்து பழக்கப்பட்ட முகங்களும், புதிய முகங்களும் நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் பாக்கியா என்ற இல்லத்தரசியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பானது.
ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது, அதிலும் கோபி, பாக்கியாவை ஏமாற்றிய இடங்கள் எல்லாம் டிஆர்பியில் டாப்பில் வந்தது.
இது கதை என்றாலும் மக்கள் நிஜமாகவே நம்முடன் இருக்கும் ஒருவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது என எண்ணி கோபி என்ற கதாபாத்திரத்தை திட்டி வந்தார்கள்.
கோபியாக நடித்த சதீஷ் கூட இது கதைதான் யாரும் திட்டாதீர்கள் என வீடியோ வெளியிட்டு இருந்தார்.
கிளைமேக்ஸ்
பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் இப்போது முடிவுக்கும் வந்துவிட்டது. இறுதி அத்தியாயம் ஓடிக் கொண்டிருக்கிறது, சதீஷ், சுசித்ரா, விகாஸ் சம்பத் என பலரும் சீரியல் முடிவது குறித்து பதிவுகள் போட்டு வந்தனர்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. கடைசிநாளில் சீரியல் குழுவினர் எடுத்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.