புது செழியன் என்ட்ரி, குடும்பத்தில் அடிதடி சண்டை! பாக்கியலட்சுமி ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நடிகர் ஆர்யன் வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக புது நடிகர் களமிறக்கப்பட்டு இருக்கிறார். அடுத்த வாரத்திற்காக பாக்கியலட்சுமி ஷோவின் ப்ரோமோ தற்போது வெளிவந்திருக்கிறது.
அதில் ஆர்யனுக்கு பதிலாக புது நடிகர் செழியனாக வந்திருக்கிறார். ஜெனியின் அப்பா அவரிடம் ஒரு லட்சம் ருபாய் கொடுக்க, அவரின் நேராக வீட்டுக்கு சென்று ஜெனியிடம் அது பற்றி கேட்டு சண்டை போடுகிறார்.
'எங்களுக்கு நடுவில் சண்டை வர நீங்க தான் காரணம்' என சொல்லி பாக்யவிடமும் சண்டை போடுகிறார். அதை கேட்டு கோபமான எழில் செழியனுடன் அடிதடி சண்டையில் இறங்குகிறார். அப்போது வீட்டுக்கு வரும் கோபி அவர்க்ளை அமைதிப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.
இப்படி பணத்தால் வீட்டுக்குள் சண்டை வந்துவிட்டதே என எண்ணி பாட்டி ஊருக்கே சென்றுவிடுவதாக கூறுகிறார். அதை கேட்டு பாக்யா கடும் அதிர்ச்சி ஆகிறார்.