காணாமல் போன குழந்தை.. பாக்யாவிடம் வசமாக மாட்டிக்கொண்ட வில்லி! அடுத்த வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யாவின் இரண்டு மகன்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. மூத்த மகன் செழியன் மாலினி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை பாக்யா ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டார்.
அது மட்டுமின்றி இளைய மகன் எழில் திருமணம் செய்திருக்கும் பெண்னின் முதல் கணவர் உயிருடன் வந்துவிட்டதனால் ஒரு பெரிய பூகம்பமே குடும்பத்தில் வர காத்திருக்கிறது.
காணாமல் போன குழந்தை
இந்நிலையில் தற்போது செழியனை பார்க்க வரும் மாலினி, ஜெனி இல்லாத நேரமாக பார்த்து குழந்தையை ஒளித்துவைத்துவிடுகிறார். அதன் பின் மொத்த குடும்பமும் பதறிப்போய் குழந்தையை தேடி மாடியில் கண்டுபிடிக்கின்றனர்.
இதை விளையாட்டுக்காக செய்ததாக மாலினி கூற பாக்யா கடும் கோபமாகி திட்டி இருக்கிறார். ப்ரோமோ வீடியோ இதோ..