எழில், அமிர்தா வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிர்ச்சி சம்பவம்- பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி புரொமோ
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல், ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் தொடங்கியது.
ஆரம்பத்தில் கதை புதுமுகங்கள் சிலர் இருக்கவே சாதாரணமாக தான் ஓடியது, ஆனால் கதையில் விறுவிறுப்பு குறையாத கதைக்களம் அமையவே இப்போது TRP டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தொடரில் பாக்கியலட்சுமி இப்போது எல்லா விஷயங்களில் களமிறங்கி சாதனை செய்கிறார், அவரது முன்னேற்றம் பல பெண்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
தற்போது கதையில் பாக்கியா இனியாவை அழைத்துக் கொண்டு செல்ல கோபி மயூ நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கிறார், இன்னொரு பக்கம் எழில் அமிர்தாவுடன் ரொமான்ஸில் இருக்கிறார்.
பரபரப்பான புரொமோ
தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் பரபரப்பான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிருடன் இருக்கிறார், தனது வீட்டிற்கு வந்து அம்மா-அப்பாவை சந்திக்கிறார்.
பின் உடனே தனது மனைவி அமிர்தாவை தேட அவரது பெற்றோர்கள் பேரதிர்ச்சி அடைகின்றனர்.