பாக்கியலட்சுமி சீரியலில் கோபி-பாக்கியா மீண்டும் திருமணம் செய்தார்களா.. வைரலாகும் படப்பிடிப்பு தள போட்டோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, இல்லத்தரசிகளின் பேராதரவை பெற்றுள்ள ஒரு தொடர்.
இப்போது கதையில் பாக்கியாவிற்கு பிரச்சனையாக இருந்த கோபி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார், எழில், செழியன் செட்டில் ஆகிவிட்டார்கள். பாக்கியா கண்ட கனவு போல இனியா நன்றாக படித்து நல்ல வேலைக்கும் சென்றுவிட்டார்.
எல்லா பிரச்சனைகளும் முடிவடைய புது பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.
சுதாகர் என்ற தொழிலதிபர் பாக்கியாவின் ரெஸ்டாரன்டை வாங்க பிரச்சனை செய்து வருகிறார். இந்த பெரிய தொழிலதிபரை பாக்கியா எப்படி சமாளிக்க போகிறார் என்பதை வரும் வாரங்களில் காண்போம்.
வைரல் போட்டோ
இந்த நிலையில் கோபி மற்றும் பாக்கியா இருவரும் கழுத்தில் மாலையுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். அதனை பார்த்த ரசிகர்கள் இப்படி மட்டும் நடந்தால் சீரியல் வேஸ்ட் ஆகிடும் என நிறைய விமர்சனங்கள் வருகின்றன.
ஆனால் இனியா திருமணத்திற்காக கூட இவர்கள் இப்படி புகைப்படம் எடுத்திருக்கலாம் என கமெண்ட்கள் வருகின்றன.