பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது?- கோபியே சொன்ன தகவல்
பாக்கியலட்சுமி சீரியல்
ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. தொடர் ஆரம்பிக்கும் போது சில புதுமுகங்கள் இருந்தனர், ஆனால் இப்போது அவர்கள் அனைவருமே மக்கள் மனதை கவர்ந்துவிட்டார்கள்.
தொடரில் கோபி அதிகம் குடித்துவிட்டு இருந்ததால் அவரது அம்மா தனது வீட்டிலேயே இருக்க வைத்துவிட்டார்.
இந்த தகவல் அறிந்த ராதிகா தனது பையுடன் பாக்கியா வீட்டிற்கு வருகிறார், இனிமேல் நான் இங்கேயே தான் இருக்க போகிறேன் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார்.
இந்த புரொமோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
கோபி கொடுத்த ஹின்ட்
தற்போது கோபி என்ற வேடத்தில் நடிக்கும் சதீஷ் சீரியல் படப்பிடிப்பில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பாக்கியா வீட்டில், அவரது அறையில் உள்ளேன், இனிமேல் இப்படி தான் கதை நகரப் போகிறது.
எது நடக்கக் கூடாதோ அது நடக்கப்போகிறது, இன்னும் முழு பணம் கொடுக்கவில்லை என கூலாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள் அவரது வீடியோ,
3 நாட்களில் ருத்ரன் படம் செய்த வசூல்.. இத்தனை கோடியா