பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் பெரிய ட்விஸ்ட்.. போட்டுடைத்த கோபி
பாக்கியலக்ஷ்மி சீரியலில் தற்போது ராதிகா கோபியை பிரிந்து சென்றுவிட்டார். "உங்களுக்குனு ஒரு குடும்பம் இருக்கு. இனி என் வாழ்க்கையில் நீங்க வேண்டாம்" என ராதிகா அவரிடம் கூறிவிட்டார்.
அதனால் கோபி தற்போது வருத்தத்தில் புலம்பி கொண்டிருக்கிறார். இந்த பிரிவை எப்படியாவது நிரந்தரம் ஆக்கிவிட வேண்டும் என ஈஸ்வரி முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து வரும் ட்விஸ்ட்
இந்நிலையில் கோபி ரோலில் நடித்து வரும் சதிஷ் தற்போது இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"ராதிகாவோட வீடும் இல்லை. பாக்யா வீட்டை விட்டு போகணும்னு ஆர்டர் போட போறா. எங்க போகுறது. நம்ம பெஸ்ட் friend செந்திலோட வீடு இருக்கே. வேண்டாம். இருக்கவே இருக்கு நம்ம cloud கிச்சன். ஓகேஓகே" என அவர் பதிவிட்டு உள்ளார்.
அதனால் கோபி வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் தான் அடுத்து வரப்போகிறது என்பது உறுதியாகி இருக்கிறது.