பாக்யா வீட்டை விட்டு வெளியேறும் இன்னொருவர்.. பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! அடுத்த வார ப்ரொமோ
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபி தன் புது மனைவி ராதிகா உடன் எதிர்வீட்டிலேயே வந்து குடியிருக்கிறார். ராதிகா செய்யும் கொடுமைகள் ஒரு புறம் இருக்க கோபியின் அப்பாவும் அடிக்கடி வந்து கோபியை டார்ச்சர் செய்துவிடுகிறார்.
மேலும் பாக்யாவின் மருமகள் ஜெனி தற்போது கர்ப்பமாக இருப்பதும் தற்போது சீரியலில் காட்டப்பட்டு வருகிறது.
வீட்டை விட்டு போகும் இனியா
இந்நிலையில் இனியா பள்ளியில் செல்போன் பயன்படுத்தியதால் அவர் பெற்றோரை அழைத்து வரும்படி கூறுகிறார்கள். ஆனால் அவர் அதை வீட்டில் சொல்லாமல் இருக்கிறார். மறுநாள் அவரை வீட்டுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
அதன் பின் தான் வீட்டில் உண்மையை சொல்கிறார். அப்போது எல்லோரும் அவரை கண்டித்து அடிக்க செல்ல, அவர் வீட்டை விட்டு போகிறேன் என சொல்லி வெளியில் போகிறார்.
அப்போது கோபி அங்கு வர.. இதை சொல்லி இனியா அவரிடம் அழுகிறார். அதனால் கோபி இனியாவை ராதிகா வீட்டுக்கு அழைத்து செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அனிகா.. ஷார்ட் உடையில் போட்டோஷூட்