பாக்கியலட்சுமி சீரியல் : கர்ப்பமாக இருக்கும் ராதிகா.. கருவை கலைக்க சொன்ன கோபி!
கர்ப்பமாக இருக்கும் ராதிகா
சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இதில் பாக்கியவை விட்டு பிரிந்த கோபி ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் ராதிகா தான் கர்ப்பமாக இருக்கிறேன் என கோபியிடம் கூறினார். ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில், ராதிகா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
கருவை கலைக்க சொன்ன கோபி
இதை கேட்டு முதலில் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த கோபி, பின் அதிர்ச்சியில் உறைந்துபோனார். இந்நிலையில், வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில் கர்ப்பமாக இருக்கும் ராதிகாவிடம் கருவை கலைத்துவிடலாமா என கோபி கேட்கிறார். இதனால் கடுப்பாகும் ராதிகா, கோபியை வெளுத்து வாங்கி விடுகிறார். பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்னவெல்லாம் கலாட்டா காத்திருக்கிறது என்று.