ஊரை விட்டே போகும் ராதிகா.. பாக்கியலட்சுமியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நீண்ட காலத்திற்கு பிறகு கோபியின் உண்மை மிகும் ராதிகா மற்றும் பாக்யா இருவருக்குமே தெரிந்துவிட்டது. ராதிகாவை சமாதானப்படுத்த பல வேலைகளை செய்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு எமோஷ்னலாக மெசேஜ் அனுப்பி வருகிறார். ஆனால் ராதிகா கோபியை மேலும் நம்புவதாக இல்லை.
இன்றைய எபிசோடில் கோபி "நான் செத்துடுவேன், உனக்காக அதை கூட செய்ய தயார்" என ராதிகாவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். அதை பார்த்துவிட்டு ராதிகாவின் மகள் மயூ பதில் அனுப்ப பார்க்கிறார். ஆனால் ராதிகா அதற்காக அவரை திட்ட.. அது வாய்ஸ் மெசேஜாக கோபிக்கு சென்றுவிடுகிறது.
அதன் பின் கோபியின் செல் போனை பாக்யா எடுத்து பார்க்க கோபி அவரிடம் கோபமாக கத்திவிட்டு செல்கிறார். மேலும் கோபியின் அப்பா சற்று பேச தொடங்கி இருக்கும் நிலையில், கோபி பற்றிய உண்மையை சொல்லிவிடுவதாக ஒரு பக்கம் கோபிக்கு ஷாக் கொடுக்கிறார்.
இன்றைய எபிசோடில் இதெல்லாம் நாளைய எபிசோடில் தான் பெரிய அதிர்ச்சியே இருக்கிறது. ராதிகா பாக்யாவை சந்தித்து பேசுகிறார். அப்போது தான் இங்கிருந்த ட்ரான்ஸ்பர் வாங்கி மும்பைக்கு சென்று செட்டில் ஆக இருப்பதாக ராதிகா கூறுகிறார்.
நாளைய எபிசோடுகான ப்ரோமோ இதோ..