பாக்கியலட்சுமி சீரியல் கிளைமேக்ஸ் எப்போது தெரியுமா... சதீஷ் வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, ஒரு குடும்ப தலைவியின் கதையாக ஒளிபரப்பாகி மக்கள் மனதை வென்ற ஒரு தொடர்.
சுசித்ரா, சதீஷ் ஆகியோரின் முக்கிய நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கப்பட்ட சீரியல் இது. 1444 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.
இனியா-நிதிஷ் விவாகரத்து முடிவுடன் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என தெரிகிறது.
நடிகர் சதீஷ்
இந்த வார சீரியல் புரொமோ வரும்போது இறுதி அத்தியாயம் என்பதோடு வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன் சீரியல் முடியப்போகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன் நடிகை சுசித்ரா சீரியலுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு மனதார நன்றி கூறியிருந்தார். இந்த நிலையில் சீரியலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சதீஷ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இன்னும் சில நாட்கள் தான் இந்த சீரியல் வரப்போகிறது என்பது பலருக்கு வருத்தமாக இருக்கிறது. நான் எப்போதும் சொல்வது தான் எந்த ஒரு தொடக்கம் வந்தாலும் அதற்கு ஒரு முடிவும் உண்டு.
இந்த முடிவு வருத்தத்தை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று கூறி இருக்கிறார். தனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அதோடு சீரியல் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்துடன் முடிவுக்கு வர இருப்பதாக கூறியுள்ளார்.