பாக்யாவிடம் வசமாக சிக்கிய கோபி! பாக்கியலட்சுமி சீரியலில் அதிர்ச்சி திருப்பம்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எப்போது தான் குடும்பத்திடம் சிக்குவார் என ரசிகர்களே தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனாலும் அவர் தொடர்ந்து மனைவி பாக்யலக்ஷ்மியிடம் சிக்காமல் தான் இருந்து வருகிறார். இன்றைய எபிசோடில் கோபியின் குடும்பம் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு தற்போது சென்னைக்கு திரும்புகின்றனர்.
அமிர்தா வீட்டில் வந்து இறங்கியதும் தான் கிளம்புவதாக சொல்லி கிளம்புகிறார். எழிலுக்கு பெண் பார்த்து வைத்திருப்பதாக பாட்டி அவரிடம் சொன்னது சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் பின் பாக்யா கோபியின் அறையில் இருக்கும் அழுக்கு துணிகளை எடுக்க செல்கிறார். பையில் இருக்கும் எல்லா துணியையும் துவைக்க வேண்டும் என கோபி சொல்ல பாக்யா பையை தூக்கிக்கொண்டு கிளம்புகிறார்.
அதன் இந்த கோபி ராதிகாவுக்கு போன் செய்து ரொமான்டிக் ஆக பேசிக்கொண்டிருக்கிறார். மிஸ் யூ, உன்னை எப்போ மீண்டும் பார்ப்போம் என நான்கு நாட்களாக நினைத்து கொண்டிருந்தேன் என கோபி சொல்லிக்கொண்டிருக்க பாக்யா உள்ளே வந்து அதை கேட்டுவிடுகிறார். கோபி கடும் அதிர்ச்சி ஆகி நிற்கிறார். பாக்யாவிடம் இப்படி கையும் களவுமாக சிக்கிவிட்டாரே கோபி! இனி என்ன நடக்கும்?
Am i joke to you..❓
— Vijay Television (@vijaytelevision) January 19, 2022
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/cL7cexZxQx