அப்பா செய்த மோசமான செயல், இனியா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் கோபி, இந்த வாரம் நடக்கப்போவது என்ன?
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக அமைந்துள்ள பாக்கியலட்சுமி இப்போது பரபரப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இத்தனை மாதங்களாக ஏமாற்றி வந்த கோபியின் கள்ளக் காதல் பற்றிய உண்மை ராதிகாவிற்கு முதலில் தெரிய வந்தது.
அடுத்து கோபியின் குடும்பத்திற்கு அதிலும் பாக்கியா மூலமாக தெரிய வந்திருக்கிறது. அவர் ஒவ்வொரு விஷயமும் சொல்ல சொல்ல குடும்பத்தினர் இப்படியெல்லாம் இவர் செய்வாரா என ஆடிப்போய்விட்டனர்.
ஆனாலும் கோபி தான் செய்தது தவறு இல்லை என சமாளிக்க செழியன் அவரை சமாதானம் செய்கிறார்.
இனியா கோபத்தில் கோபியிடம் இனி பேசப்போவது இல்லை என கூற அவர் ஷாக் ஆகிறார்.

புதிய புரொமோ
இந்த வாரம் வந்துள்ள புதிய புரொமோவில் புதியதாக எதுவும் இலலை. இனியா தனது அப்பாவிடம் வந்து பேச வேண்டாம், ஏமாற்றிவிட்டீர்கள் என அழுகிறார். பின் ஜெனிபரிடம் தனது அம்மாவை நினைத்து வருத்தப்பட்டு அழுகிறார்.
இன்னொரு பக்கம் பாக்கியா ராதிகா வீட்டிற்கு சென்று நீங்களும் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என கேட்கிறார். இந்த வாரம் இப்படியே ஒருவருக்கொருவர் அழுது நியாபம் கேட்டு தொடர் முடியும் என தெரிகிறது.
சிறுவயதில் முதன்முறையாக மேடையில் பாடல் பாடிய நடிகை ஸ்ருதிஹாசன்- அவரே வெளியிட்ட வீடியோ