கொண்டாட்டத்தில் இறங்கிய பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர்- என்ன விஷயம் தெரியுமா?
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் பல மாதங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி.
கணவரால் ஏமாற்றப்பட்ட பாக்கியா தனது பயத்தை போக்கி எப்படி வெளியே வந்து தனது குடும்பத்தை கவனிக்கிறார், சவால்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.
ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கோபி Credit Card பணம் கட்டாத விஷயம் ராதிகாவிற்கு தெரிய வருகிறது.
அதேபோல் பாக்கியா தனது அரசு கான்டிராக் வேலையை சிறப்பாக செய்தும் முடிக்கிறார்.
இப்போது கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
சிறப்பான செய்தி
விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் ஒளிபரப்பாகி தற்போது 1000 எபிசோடை எட்டிவிட்டதாம். 2020ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் தேதி இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
தற்போது டிசம்பர் 2023ல் பாக்கியலட்சுமி தொடர் 1000 எபிசோடை எட்ட மக்கள் தொடர் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.