குடும்பத்துடன் வந்து பாக்கியாவை வெளியே போக சொன்ன ராதிகா- பாக்கியாவின் அதிரடி சவால், பரபரப்பு புரொமோ
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பின் உச்சமாக ஓடுகிறது. பாக்கியாவிடம் வீட்டிற்கு பணம் கேட்ட கோபி இப்போது அந்த வீட்டிற்கே ராதிகாவுடன் வந்து சேர்ந்துள்ளார்.
அதில் இருந்து வீட்டில் பிரச்சனையாகவே இருந்து வருகிறது, இதில் கோபி தான் சிக்கி தவிக்கிறார், ஆனால் சில ரசிகர்கள் அவருக்கு இது தேவை என கமெண்ட் செய்கிறார்கள்.
இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிற்காக பாக்கியாவிடம் பேச போய் அவரிடம் நன்றாக திட்டுவாங்கி வருகிறார்.
பரபரப்பு புரொமோ
தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் பரபரப்பு புரொமோ வந்துள்ளது. அதில் ராதிகா தனது அம்மா, அண்ணன் குடும்பத்துடன் சேர்ந்து கோபியின் அம்மாவிடம் சண்டைக்கு வருகிறார்.
இடையில் பாக்கியா தலையிட்டு பேச அவரை வீட்டைவிட்டு வெளியே செல்லுங்கள் என்கிறார்.
பின் கோபி பாக்கியாவிடம் நீ இன்னும் ரூ. 18 லட்சம் தர வேண்டும் என கூற பாக்கியா இன்னும் ஒரு மாதத்தில் உங்களது பணம் கைக்கு வரும், உங்கள் குடும்பத்துடன் வெளியே செல்லுங்கள் என கெத்தாக கூறுகிறார்.
இதோ அந்த பரபரப்பான புரொமோ,