மீண்டும் கோபியை வீட்டிற்கு அழைத்து வரும் ஈஸ்வரி- பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன- பரபரப்பு புரொமோ
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர்.
தனது கணவரால் பாதிக்கப்பட்டு தனியாக தன் வாழ்க்கையை பார்த்து வரும் பாக்கியா வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தார் கோபி.
இப்போது இரண்டாவது மனைவி ராதிகா பணம் கேட்பதால் அதை சமாளிக்க முடியாமல் இப்போது உடல்நிலை சரியில்லை என நாடகம் ஆடி வருகிறார் கோபி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் ஈஸ்வரி மகனுக்கு உடல்நிலை சரியில்லை என மறுபடியும் பழைய முடிவை எடுக்கிறார்.
பரபரப்பு புரொமோ
தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ஈஸ்வரி கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார், இதனால் பாக்கியா கடும் கோபத்தில் இருக்கிறார்.
அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை. இதோ அந்த பரபரப்பான புரொமோ,