கோபி பற்றிய உண்மையை அறிந்த ராதிகா, செய்த அதிரடி செயல்- இனி நடக்கப்போவது என்ன, பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ
பாக்கியலட்சுமி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி.
ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.
செழியன்-ஜெனி பிரிந்ததில் இருந்து அடுத்தடுத்து அதிரடி கதைக்களம் தான் அமைந்து வருகிறது.
எழில்-அமிர்தா பிரச்சனை ஒருவழியாக சமீபத்தில் முடிந்தது, இதனால் அடுத்த வேலையாக பாக்கியா ரெஸ்டாரன்ட் திறக்கும் வேலைகளை தொடங்கி இருந்தார்.
புதிய புரொமோ
இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான பாக்கியலட்சுமி புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பல நாட்களாக மறைத்து வைத்திருந்த கோபியின் ரகசியம் வெளியே வந்துவிட்டது.
அதாவது கம்பெனியை இழுத்து மூடிய விஷயத்தை தெரிந்துகொண்ட ராதிகா அதை வீட்டில் எல்லோரிடமும் கூறிவிட்டார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் வாரத்தில் காண்போம்.