கோர்ட்டில் இருந்து வந்த லெட்டர்.. கோபிக்கு அடி மேல் அடி! அதிரடி முடிவெடுத்த பாக்யா
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபிக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பது மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்து அனைவரும் அவரை நிற்க வைத்து கேள்வி கேட்கிறார்கள்.
அந்த நேரத்தில் கோர்ட்டில் இருந்து விவாகரத்து பற்றி ஒரு லெட்டர் வருகிறது. அதை பிரித்து படித்த எழில் கடும் ஷாக் ஆகி விஷயத்தை சொல்கிறார். அப்போது கோபியின் அம்மா அதை பற்றி கேட்டு அவரை பளார் என அறைகிறார்.

மேலும் கோபியின் அப்பாவும் தனக்கு ராதிகா விஷயம் பற்றி எனக்கு முன்பே தெரியும் என சொல்கிறார். நான் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததை பார்த்து கோபி சந்தோஷப்பட்டான் எனவும் கூற மேலும் எல்லோரும் அதிர்ச்சி ஆகின்றனர்.
இப்படியே மாறி மாறி அனைவரும் திட்டிக்கொண்டிருக்க கோபி தலைகுனிந்து நின்றுகொண்டிருக்கிறார்.
அதன் பின் பாக்யா இனியும் பொறுக்க முடியாது என சொல்லி வீட்டை விட்டு வெளியேறும் முடிவு எடுக்கிறார்.
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu