பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட பாக்யா.. இனியா மார்க் பார்த்து குதிக்கும் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று பாக்யா சமையல் வேலையை சரியாக செய்யாததால் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
சிக்கல்
இனியா மார்க் என்ன என தெரிந்துகொள்ள பாக்யா அவரது போனையே பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் சமையல் வேலையில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடுகிறார். அவர் போனில் டவர் இல்லை என பல இடங்களில் நின்று பார்த்துக்கொண்டிருப்பதை அந்த நிச்சயதார்த்த பெண் வீட்டை சேர்ந்தவர் பார்த்து திட்டுகிறார்.
அதன் பின் பாயாசம் தீய்ந்துபோய்விட்டது என சொல்லி மாப்பிள்ளை வீட்டார் பெரிய பிரச்சனை செய்கின்றனர். திருமணத்தையே நிறுத்துவதாக கூறுகின்றனர். இதனால் கோபமாகும் பெண் வீட்டார் பாக்யா மற்றும் அவரது உடன் வந்த பெண்களை ஒரு அறையில் அடைகின்றனர்.
பூரிப்பில் கோபி
மறுபுறம் கோபி இனியாவின் மார்க் என்ன என தெரிந்துகொள்ள அவருக்கே போன் செய்து கேட்கிறார். இனியா பள்ளியிலேயே முதல் மார்க் என அறிந்து அவர் இன்ப அதிர்ச்சி ஆகிறார்.
இனியா மற்றும் குடும்பத்தினர் பள்ளிக்கு செல்வதை அறிந்து கோபியும் அங்கே சென்று இனியாவை பாராட்டி தள்ளுகிறார் கோபி.
பாக்யா சிக்கலில் இருந்து தப்புவாரா, பள்ளியில் இனியாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவுக்கு வருவாரா இல்லையா? நாளைய எபிசோடில் தான் தெரிய வரும்.
விஜய் சேதுபதி உடன் போட்டியா? அவருடன் சேர்ந்து நடிப்பது பற்றி சிவகார்த்திகேயன் பேட்டி