பாக்யாவை வம்பில் மாட்டிவிட்ட பழனிச்சாமி! பாக்கியலட்சுமி சீரியலில் இன்று
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா வீட்டில் ஈஸ்வரி படும் கஷ்டம் எல்லாம் ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பாக்யா நடத்தி வரும் ஹோட்டலுக்கு புது சிக்கல் வந்து இருக்கிறது.
அருகில் பார் ஒன்றை திறக்க ஏற்பாடு நடந்து வரும் நிலையில், குடிகாரர்கள் வந்து இனி பிரச்சனை செய்வார்களோ என பயத்தில் இருக்கிறார் பாக்யா.
பழனிச்சாமி வெச்ச ட்விஸ்ட்
கடைக்கு வரும் பழனிசாமியிடம் பாக்யா பார் விஷயம் பற்றி சொல்கிறார். அதை நினைத்து பயப்படவேண்டாம், பார் உரிமையாளரிடம் ஃபிரென்ட் ஆகிவிடலாம், அது தான் நல்லது என அட்வைஸ் கூறுகிறார்.
அந்த பார் உரிமையாளரை நேரில் சந்தித்து பேசும்போது திறப்பு விழாவுக்கு சாப்பாடு செய்து கொடுப்பதாக சொன்னவர் ஏமாற்றிவிட்டார் என கூறுகிறார். அப்போது பழனிச்சாமி உடனே பாக்யா பற்றி பெருமையாக பேசி அந்த காண்ட்ராக்ட்டை பாக்யாவிடமே கொடுங்க என கூறுகிறார்.
அவரும் என்னவெல்லாம் வேண்டும் என மெனுவை சொல்லி, 150 பேருக்கு சமைங்க என சொல்லி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு போகிறார். குடிகாரர்கள் வந்தால் என்ன ஆகும் என பாக்யா அப்போதும் பயத்திலேயே இருக்கிறார்.
பிஸ்னஸ் செய்ய தொடங்கினால் முதலில் பயப்படுவதை தான் விட வேண்டும். ஒரு புயல் வருகிறது என்றால், அதில் இருந்து தப்பிப்பது முடியாத காரியம், ஆனால் அதை வைத்து என்ன ஆதாயம் பெறலாம் என தான் நாம் பார்க்க வேண்டும். அப்போது தான் தொழில் செய்ய முடியும் என அட்வைஸ் கூறுகிறார் பழனிச்சாமி.
அதை கேட்டு பாக்யாவும் ஓரளவு மனம் மாறுகிறார்.
பாக்யாவை பழனிச்சாமி வம்பில் மாட்டி விட்டிருக்கிறாரா அல்லது நல்லது தான் செய்திருக்கிறாரா என போக போக தான் தெரியும். பொறுத்திருந்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.