கோபி வீட்டில் பிரச்சனை ஓவர், அடுத்து ராதிகா எடுக்கப்போகும் முடிவு- அதிரடி புரொமோ
பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பித்தது முதல் குடும்பத்திற்காக உழைக்கும் ஒரு குடும்ப தலைவியாக இருந்து வந்தார். யார் என்ன சொன்னாலும், திட்டினாலும், அசிங்கப்படுத்தினாலும் தனது குடும்பம் என சென்றார்.
ஆனார் இப்போது தனது கணவரே தன்னை ஏமாற்றிவிட்டார் என்று தெரிந்ததும் பாக்கியா புதிய பெண்ணாக மாறியிருக்கிறார்.
யாரும் வேண்டாம் என வீட்டைவிட்டு வெளியே செல்கிறார், அவருக்காக குடும்பமே வருத்தப்படுகிறது.
புதிய புரொமோ
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் புதிய புரொமோ வந்துள்ளது. அதில் ராதிகா வெளியூர் கிளம்ப அவரது அம்மா மற்றும் அண்ணன் கோபியை திருமணம் செய்து கொள்வதில் என்ன பிரச்சனை என கேட்கிறார்கள்.
அவர்கள் பேசுவதை கேட்ட ராதிகா கொஞ்சம் யோசிப்பது போல் தெரிகிறது. விரைவில் அவர் கோபியை திருமணம் செய்வார் எனவும் கூறப்படுகிறது.