பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யனா இது?- தாடி எல்லாம் வளர்த்து ஆளே மாறிவிட்டாரே?
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் தான் டிஆர்பியில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் பெங்காலி மொழியில் வெளியான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக் தான் இது.
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயங்களை தொடர் பேசிக்கொண்டு தான் வருகிறது.
இதில் கோபி எப்போது பாக்கியா-ராதிகாவிடம் சிக்குவார், அவருக்கு எப்போது தகுந்த தண்டனை கிடைக்கும் என தான் மக்கள் அனைவரும் படு கோபமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
செழியன் நியூ லுக்
இந்த தொடர் ஆரம்பத்தில் செழியன் என்ற வேடத்தில் ஆர்யன் என்பவர் நடித்து வந்தார். அவர் இடையில் தொடரில் இருந்து வெளியேற வேறொருவர் நடித்து வருகிறார்.
தற்போது ஆர்யன் கனா காணும் காலங்கள் வெப் தொடரில் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அவரது லுக் புகைப்படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது.
அதில் தாடி எல்லாம் அதிகம் வளர்த்து ஆளே மாறியிருக்கிறார்.
இதோ அவரது புகைப்படம்,
இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படம் இதோ