தற்கொலை முயற்சி செய்த இனியா.. கதறி அழும் பாக்யா! பாக்கியலட்சுமி சீரியலில் இன்று
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கேன்டீன் வரும் ராதிகா பாக்யாவை அழைத்து pastry எல்லாம் தயாரா என கேட்கிறார். இன்னும் ரெண்டு நாள் டைம் கொடுங்க மேடம் என ஆரம்பத்தில் கெஞ்சுவது போல பாக்யா நடிக்கிறார்.
அதன் பின் தான் கேக் எல்லாமே தயாராக இருப்பதை பார்த்து ராதிகா ஷாக் ஆகிறார். பயந்து ஓடிடுவேன்னு நெனச்சீங்களா, ரெண்டு நாளில் கத்துகிட்டு செஞ்சிட்டேன் என கூறி ராதிகாவுக்கு பதிலடி கொடுக்கிறார் பாக்யா.
திட்டிய கோபி, தற்கொலை முடிவெடுத்த இனியா
இரவில் இனியா போனை பார்த்துகொண்டிருப்பதை பார்த்து ராதிகா அவரை திட்டுகிறார். போனை வைத்துவிட்டு போய் தூங்கு என சொன்னதற்கு, நீங்க யார் அதை சொல்ல என இனியா சண்டைக்கு போகிறார். இதை பார்த்து கோபி இனியாவை திட்டுகிறார்.
இதனால் இரவில் எல்லோரும் தூங்கியபிறகு இனியா தாத்தா சாப்பிடும் மாத்திரைகளில் ஐந்தாறு எடுத்து விழுங்கிவிடுகிறார். அதன் பின் அழுதுகொண்டே தாத்தாவிடம் சொல்ல, அவர் எல்லோரிடமும் கூறி உடனே ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்.
இனியாவை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு தாத்தா பாக்யாவுக்கு போன் செய்கிறார். விஷயத்தை கேட்டு பாக்யா கடும் அதிர்ச்சி ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.
இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக்